addes1

Tracking

Thursday, February 5, 2015

agni-5-sets

பெங்களூரு: அக்னி-5 ஏவுகணை வெற்றி புதிய அத்தியாயத்தை தொடங்க வழிகோலியுள்ளதாக பெருமை தெரிவித்தார் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மே்பாட்டு அமைப்பின் (drdo) முன்னாள் தலைவர் அவினாஷ் சந்தர். அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்தது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன. அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்க வல்லவை. 17.5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட அக்னி-5 ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. 1 டன் எடையுள்ள அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது.

தொலை தூரம் பாய்ந்து தாக்கும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்ட நிலையில், (அப்போதைய) டிஆர்டிஓ தலைவர் அவினாஷ் சந்தர் 'ஒன்இந்தியாவுக்கு' அளித்த சிறப்பு பேட்டி: அக்னி-5 ஏவுகணை எங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது. நடமாடும் வாகனத்தில் இருந்து இதுபோன்ற ஒரு சக்தி வாய்ந்த ஏவுகணையை ஏவியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, எந்த ஒரு இடத்தில் இருந்தும், சக்தி வாய்ந்த ஏவுகணையை ஏவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. குறிதவறாமல் இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை, டிஆர்டிஓ வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். இன்னும் பல ஏவுகணை சோதனைகள் நடத்த இந்த வெற்றி உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

 
design by: amdg